Posts

திருவிவிலியம் “Biblia” என்று கிரேக்க மொழியிலும் இலத்தீன் மொழியிலும், Bible என்று ஆங்கில மொழியிலும் குறிக்கப்படுகின்ற திருவிவிலியம் கடவுளால் வெளிப்படுத்தப்பட்ட நூல்களின் தொகுப்பாகும். திருவிவிலியம் என்பது ஒரு வரலாற்று நூலோ அல்லது ஒரு அறிவியல் நூலோ அல்ல. இது விவிலித்தில் சொல்வப்பட்டிருக்கின்ற இறை மக்களின் விசுவாச வாழ்வை உள்ளடக்கிய, பிரதிபலிக்கின்ற, விசுவாசத்தில் வாழ வழிகாட்டுகின்ற நூலாகும். இந்த விசுவாச நூலின் மையப் பொருளாக கடவுள் எவ்வாறு மனிதரை அன்புசெய்தார் என்றும் அதன் பலனாக மனிதர் எவ்வாறு கடவுளன்பிலும் பிறரன்பிலும் வாழ அழைக்கப்ட்டனர் என்பதையும் விரிவாக எடுத்துக் கூறும் நூல். சுருக்கமாக கடவுளின் மீட்புத்திட்டத்தில் மனிதர் எவ்வாறு பங்குபெற்று மீட்ப்புப் பெறலாம் என்பதை கூறும் மாண்பு மிக்க நூல். உலகத்திலேயே திருவிவியம் எனும் 'பைபிள்' தான் அதிக மொழிகளில் (சுமார் 2,100) மொழிபெயற்கப்பட்டு அச்சு இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்ட 1815ஆம் ஆண்டிற்குப் பின் சுமார் 500 கோடிக்கும் மேலான பிரதிகள் அச்சடிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது. திருவிவிலியமானது இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக...
Tamil Christian songs